Friday, August 13, 2010

MTC and college students

இந்த 21 g பஸ்ல காலேஜ் பசங்க படும் பாடு ரொம்ப மோசம்....அந்த பஸ் எங்க காலேஜ் பக்கம் உள்ள வள்ளுவர் சிலை பஸ் நிறுத்தத்தில் நிற்காது. ஒரு பஸ் சென்றால்  அது பின்னாடி பத்து பேர் ஓடிகிட்டே போனால் தான் அடுத்த நிருத்ததிலாவது பிடிக்க முடியும். அப்படி பஸ் பின்னால் ஓடும் வாலிபர்களில் ஒருவன் தான் நான்.
நேற்று எப்படியோ கஷ்டப்பட்டு ஓடி பஸ்ஐ பிடித்தேன். பஸ் சரி கூட்டம். எப்படியோ சமாளித்து ஒரு seat பிடித்து அமர்ந்தேன். அடுத்த சிறு நொடிகளில் பின்னால் யாரோ தட்டினார்கள், யாரென்று பார்த்தல் யாரோ ஒரு பெரியவர் தனக்கு மயக்கம் வருவதாக சொல்லி என்னை எழுப்பினார். பின்பு நான் பஸ் நடுவே நின்று கொண்டிருந்தேன் அப்போ ஒரு ஆன்டி வந்து, காலேஜ் பய்யன் தானே பின்னால் போகலாம்ல என்று சொன்னார். 
 சரி என்று நானும் எழுந்து foot board அடிக்கலாம் என்று சென்றேன். திடீரென்று ஒரு குரல் என்னை சாவுகிராக்கி என்று சென்னை தமிழில் அழைத்தது. கண்டக்டர் தான் அழைத்தார், உள்ளே போடா என்று என்னை அன்புடன் பணித்தார். 
சென்னை பஸ்கள் இப்படி தான் இருக்கும்.இதில் , வலது பக்கம் முழுவதும் மற்றும்  பின்னால் இருக்கும் சீட்கள் மகளிர்களுக்கு.. இடது புறமும் மகளிரும், பெரிசுகளும் அக்கரிமித்து கொள்வார்கள். நடுவில் நின்று கொண்டு பஸ்சில் உள்ள அனைவருக்கும் டிக்கெட் எடுத்து கொடுப்பது தான் எங்கள் வேலை. 
இப்படி பெரியவர்களுக்கும், மகளிர்களுக்கும், குழந்தைகளுக்கும், சீட்டினை தியாகம் செய்து விட்டு foot board அடிக்கும் மாணவர்களின் நிலைமையை பார்த்து Mtc மகளிர் சிறப்பு பேருந்து உடுவது போல் மாணவர்கள் சிறப்பு வண்டி உட்டால் நன்றாக இருக்கும் .

4 comments: